திருவண்ணாமலை மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. கிரிவலப்பாதையில் 14 கி.மீ நடைபெற்ற பேரணியில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தனது குடும்பத்தாருடனும், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தும் கலந்து கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
நூறு விழுக்காடு வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி!
திருவண்ணாமலை: நூறு விழுக்காடு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அண்ணா நுழைவு வாயிலில் தொடங்கிய பேரணியானது முக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு மேற்கொண்டு மீண்டும் தொடங்கிய இடத்தையே வந்தடைந்து நிறைவுற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரா.முத்துகுமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குமார், அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மோட்டிவேசனல் ஸ்பீச் கொடுத்த கமல் முதல் அதிமுகவிற்கு சேலஞ்ச் விட்ட அமமுக வேட்பாளர் வரை: இன்றைய தேர்தல் சரவெடிகள்