தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறந்த ஆசிரியருக்கான விருதை தட்டிச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்! - best teacher was awarded by the Lions

திருவண்ணாமலை: லயன்ஸ் சங்கம் சார்பில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான விருது போளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த ஆசிரியர் ஜெயவேலு

By

Published : Sep 29, 2019, 7:17 AM IST

மாவட்ட லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. லயன்ஸ் சங்கம் மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தின விழாவில், சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெறுவதற்கு போளூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும், ஆசிரியருமான ஜெயவேலு தேர்வு செய்யப்பட்டார்.

அதனடிப்படையில் லயன்ஸ் மாவட்ட ஆளுநரிடமிருந்து, சிறந்த ஆசிரியருக்கான விருதை ஆசிரியர் ஜெயவேலு பெற்றுக்கொண்டார். நல்லாசிரியர் விருதுக்கு தன்னை பரிந்துரை செய்த போளூர் அரிமா சங்கத்திற்கும், பன்னாட்டு அரிமா குழுவிற்கும், நிகழ்ச்சி ஏற்பாடு செய்த ஆர்.கே. பேட்டை அரிமா சங்கத்திற்கும், தனது மனமார்ந்த நன்றியை விருது பெற்ற ஜெயவேலு தெரிவித்துக்கொண்டார்.

மேலும் படிக்க: அரசுப் பள்ளியை சுத்தம் செய்த சிஆர்பிஎப் வீரர்கள்

ABOUT THE AUTHOR

...view details