தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலையில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் படுகாயம்

திருவண்ணாமலை: ரோந்துப்பணியில் ஈடுபட்ட வனக்காப்பாளர்களுக்கும் வேட்டையாடவந்த இருவருக்குமிடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் படுகாயங்களுடன் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வனக்காப்பாளர்களை தாக்கிய இருவர் உட்பட 4 பேர் படுகாயம் - மருத்தவமனையில் அனுமதி
வனக்காப்பாளர்களை தாக்கிய இருவர் உட்பட 4 பேர் படுகாயம் - மருத்தவமனையில் அனுமதி

By

Published : Mar 2, 2020, 2:20 PM IST

திருவண்ணாமலை வனசரகத்திற்குள்பட்ட கவுத்திமலை காட்டுப் பகுதியில் நேற்று இரவு வனவர் ராதா தலைமையில் வனகாப்பளர்கள் பாலாஜி, சம்பத், கனகராஜ் உள்ளிட்ட எட்டு பேர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாலை 2 மணியளவில் வேடியப்பன் கோயில் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நிற்காமல் சென்றனர். இவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சித்த வனக்காப்பாளர்கள் சம்பத், பாலாஜி இருவரையும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டனர். இதனால், இருவரும் காயமுற்றனர்.

வனக்காப்பாளர்கள் திருப்பிச் சுட்டதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்.

வனக்காப்பாளர்களை தாக்கிய இருவர் உட்பட 4 பேர் படுகாயம் - மருத்தவமனையில் அனுமதி

பின்னர் வந்த வனக்காப்பாளர்கள் காயமடைந்த நான்கு பேரையும் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் மூலக்காடு பகுதியைச் சேர்ந்த சிவசந்திரன், வெங்கடேசன் என்பதும் அவர்கள் காட்டுக்கு வேட்டையாட வந்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 'மாளிகையாய் மின்னும் மருத்துவமனை மதில்கள்' - மாணவர்களின் கை வண்ணம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details