திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நேற்று 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது, பக்தர்கள் அரோகரா என்ற முழக்கத்துடன் ஏற்றப்பட்டது. முன்னதாக அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த ஆண்டு பக்தர்களுடைய எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் காவல் துறையினரின் அடக்குமுறை அதிகமாக காணமுடிந்தது.
மகா தீபத் திருவிழாவில் போலீஸ் அலட்சியம் - பக்தர்கள் குற்றச்சாட்டு - police atrocities in tiruvannamalai karthigai deepam
திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது காவல் துறையினர், அரசு அலுவலர்களின் போக்கு பக்தர்களை வெறுப்படையச் செய்துள்ளது.
![மகா தீபத் திருவிழாவில் போலீஸ் அலட்சியம் - பக்தர்கள் குற்றச்சாட்டு maha deepam police tiruvannamalai Atrocities of Police and Government Officials at tiruvannamalai karthigai deepam police atrocities in tiruvannamalai karthigai deepam கார்த்திகை தீபத்திருவிழா போலீஸ்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5334857-thumbnail-3x2-police-atrocities.jpg)
மகா தீபத்தை காண வந்த பக்தர்களை பிடித்து இழுத்து தள்ளுவதிலேயே காவல் துறையினர் குறியாக இருந்தனர். ஆனால், அரசு அலுவலர்கள், அவர்களின் குடும்பத்தினர் கார்த்திகை தீபத்தைக் காண்பதற்கு மழையில் நனையாதவாறு பாதுகாப்பான முறையில் அரங்குகள் அமைக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பு நடைமுறையும் ஏற்படுத்தப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே, இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை அரசு அலுவலர்கள், காவல் துறை ஆகியோரின் திருவிழாவாக மாறி இருப்பதாக பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.