தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் - national youth day 2020

திருவண்ணாமலை: ராமகிருஷ்ணா பள்ளி, ஸ்ரீ வித்யாலயா பள்ளி மாணவர்கள் இணைந்து சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடினர்.

swami vivekananda birthday 2020
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் 2020

By

Published : Jan 13, 2020, 10:26 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, சுவாமி விவேகானந்தா சேவை மையம் சார்பில் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள், ஸ்ரீ வித்யாலயா பள்ளி மாணவர்கள் இணைந்து செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து குயலம் அருகாமையில் உள்ள விவேகானந்தர் மடம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அங்குள்ள விவேகானந்தர் சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனிடையே திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் முன்பு விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தின விழாவாகக் கொண்டாடப்பட்டது.

திருவண்ணாமலையில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

இதில் விவேகானந்தரின் சாதனைகளையும் பெருமைகளையும் நினைவுகூரும் வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உரையாற்றினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதையும் படியுங்க: 49 ஆண்டுகளை நிறைவு செய்த விவேகானந்தர் பாறையின் நினைவுச் சின்னம்!

ABOUT THE AUTHOR

...view details