தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி மோதி உதவி பொறியாளர் உயிரிழப்பு - உறவினர்கள் ஆர்ப்பாட்டம்! - லாரி மோதல்

திருவண்ணாமலை: சிறுவள்ளூர் கிராமம் அருகே உதவி பொறியாளர் தணிகைவேல் என்பவர் ஆய்வு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பின்புறம் வந்த லாரி மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி மோதி உதவி பொறியாளர் உயிரிழப்பு
லாரி மோதி உதவி பொறியாளர் உயிரிழப்பு

By

Published : Sep 27, 2020, 12:40 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா வயலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாதவன் என்பவரது மகன் தணிகைவேல் (27) கலசப்பாக்கம் நெடுஞ்சாலை துறை கட்டுமானம், பராமரிப்புப் பிரிவு உதவி பொறியாளராக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு மூலம் பணியில் சேர்ந்து பணியாற்றிவருகிறார்.

வழக்கம்போல் அலுவலகம் சென்ற பிறகு கலசப்பாக்கம் அடுத்த நவாப்பாளையம் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்வதற்காக செல்லும்போது சிறுவள்ளூர் கிராமம் அருகே பின்புறம் வந்த லாரி மோதி தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

லாரி மோதி உதவி பொறியாளர் உயிரிழப்பு
இறந்த உதவி பொறியாளர் தணிகைவேலின் குடும்ப உறவினர்களுக்கு தகவல் அளிக்காமல், உடலை எடுத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பியுள்ளனர். அவரது தம்பிக்கு மட்டுமே நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் தகவல் அளித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மீது சந்தேகம் அடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்து ஏன்? உறவினர்களுக்கு தகவல் அளிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர்.
தணிகைவேல் இறந்தது சந்தேகமாக உள்ளது எனக்கூறி, உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையின் பிணவறையின் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர் இ.முரளி தலைமையில் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை அளிக்கப்படும் என்றும் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு உடலை அவரது இல்லத்துக்கு எடுத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: பெரியார் சிலையில் காவி நிறம்; அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ABOUT THE AUTHOR

...view details