திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இளநிலை, முதுகலை ஆகிய பட்டப்படிப்புக்கு தேர்வுக் கட்டணம், மதிப்பெண் கட்டணம் ஆகியவற்றினை உயர்த்தியதைக் கண்டித்து 2000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், இந்திய மாணவர் சங்கத்தினர் வகுப்புகளைப் புறக்கணித்துத் தொடர்ந்து ஐந்து நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அதிரடியாக 68 ரூபாய் என்றிருந்த இளநிலை பட்டப்படிப்பு தேர்வுக் கட்டணங்களை 100 ரூபாய் என்றும், 100 ரூபாய் என்றிருந்த முதுகலை பட்டப்படிப்பு தேர்வுக் கட்டணங்களை 120 ரூபாய் என்றும் அதிரடியாக உயர்த்தியுள்ளது. மேலும், மதிப்பெண் பட்டியல் பெற 200 ரூபாய் என்று இருந்த கட்டணத்தினை 250 ரூபாய் எனவும் உயர்த்தியுள்ளதாகவும் இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டினர்.