தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தி.மலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் - முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை: ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

army requpment tvm
army requpment tvm

By

Published : Jan 9, 2021, 10:54 PM IST

சென்னை மண்டல ராணுவ தலைமை அலுவலகம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வரும் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் கலந்துகொள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 31ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்திருந்தனர்.

என்னென்ன பணிகள்

சிப்பாய் தொழில்நுட்பம், சிப்பாய் நர்சிங் உதவியாளர், சிப்பாய் நர்சிங் உதவியாளர் (கால்நடை), சிப்பாய் எழுத்தர், ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம், சிப்பாய் பொதுப்பணி, சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணிகளுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலக இயக்குநர் கர்னல், மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, முகாமில் பங்கேற்க வரும் இளைஞர்கள் குரல் பரிசோதனை செய்த அறிக்கையை எடுத்து வரவேண்டும் அப்பொழுதுதான் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் இடைத்தரகர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். ஆள்சேர்ப்பு முகாமிற்கு விண்ணப்பித்தவர்கள் அடையாள அட்டையை ஜனவரி 25ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் இதுகுறித்த தகவல்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மூன்றாம் கண்! யாருக்கு நண்பன்?

ABOUT THE AUTHOR

...view details