கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாதவாறு இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன் காரணமாக மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் அனைவரும் இரவு-பகல் பாராமல் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் தங்களது குடும்பத்தை மறந்து மக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்களின் மருத்துவச் சேவையை பாராட்டும்விதமாக அவர்களைப் பாரட்டும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.