நாடு முழுவதும் கரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் கிராம மக்களிடையே கரோனா பீதி அதிகரித்துள்ளது. கிராமப்புற பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் தங்களது வீடுகளின் வாசல்களில் மஞ்சள் கலந்த நீரை கிருமி நாசினியாக உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், சோப்பு போட்டு தினமும் குறைந்தது 20 முறையாவது கை கழுவ வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர்.