தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழா: ஐயங்குளத்தில் தீர்த்த வாரி - ஆடி மாதம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் ஆனி திருமஞ்சன விழாவையொட்டி ஐயங்குளத்தில் தீர்த்த வாரி வெகு விமரிசையாக நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில்

By

Published : Jul 18, 2019, 11:50 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு, ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8ஆம் தேதி அண்ணாமலையார் சன்னதியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் ஆனி மாதம் தொடர்ந்து பத்து நாட்கள் இந்த பிரம்மோற்சவ விழா நடைபெறும்.

அதன்படி இன்று அதிகாலை கோயிலின் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து விநாயகர் மற்றும் சந்திரசேகரர் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

அண்ணாமலையார் கோயில்
பின்னர், இறுதி நாளான இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள ஐயங்குளத்தில் தீர்த்த வாரி நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் வீதி உலா வந்து ஐயங்குளத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனைகள் நடைபெற்றது. மேலும் சூலத்தினை ஐயங்குளத்தில் 3 முறை மூழ்கி பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனைகளுடன் தீர்த்த வாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details