திருவண்ணாமலை:தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் எனக் கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்த அன்னபூரணி யூ-ட்யூப்பில் ஆன்மிக சொற்பொழிவை நடத்தி வந்தார்.
இதனையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பொதுமக்களுக்கு ஆன்மிக சொற்பொழிவை வழங்கினார்.
இந்நிலையில் கீழ்பென்னாத்தூர் ராஜாதோப்பு பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போட்டார். அதனைத்தொடர்ந்து இன்று அன்னபூரணி அரசு தனது பிறந்தநாளை முன்னிட்டு, ஆன்மிக தரிசனம் கொடுத்தார். எப்போதுமே வைப்ரட்டர் மோடில் இருக்கும், அன்னபூரணி அரசு அம்மா, இன்று நிசப்தமாகி, தனது பக்தர்களுக்கு அருளாசி கொடுத்தார்.
ஆதிசக்தியின் அவதாரம் என பகீர் கிளப்பிய அன்னபூர்ணியின் பிறந்தநாள் விழா அப்போது ஆண்கள், பெண்கள் அவரது காலினை தொட்டு வணங்கி சூடம் ஏற்றி வழிபட்டனர்.
இதையும் படிங்க:Spiritual: 'பார் முழுசா அன்னபூரணி... சாமி மாதிரி உட்கார்ந்திருப்பதைப் பார்' - நடவடிக்கை எடுக்குமா தமிழ்நாடு அரசு?