தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Karthigai Deepam: அண்ணாமலையார் தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை! - திருவண்ணாமலை

அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்திற்கு பயன்படுத்த 1150 மீட்டர் காடா துணிகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை
அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை

By

Published : Dec 5, 2022, 11:47 AM IST

திருவண்ணாமலை: பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையார் திருத்தலத்தில் கார்த்திகை தீப திருவிழா கடந்த மாதம் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாளை திருக்கார்த்திகை தீப திருவிழா நடைபெற உள்ளது. அதிகாலையில் அண்ணாமலையார் கோயிலில் உள்ள அண்ணாமலையார் கருவறையின் முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் திருக்கோயிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்த மகா தீப நிகழ்வில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் கொப்பறையில் பயன்படுத்தப்படும் தீப திரியை ஒவ்வொரு ஆண்டும் கட்டளை தாரர்கள் அண்ணாமலையார் கோயிலுக்குக் காணிக்கையாக வழங்குவார்கள்.

அண்ணாமலையார் கோயில் தீபதிருவிழா தீபம் ஏற்றும் திரிக்கு சிறப்பு பூஜை

இந்த ஆண்டு கட்டளை தாரர்கள் 1150 மீட்டர் காடா துணிகளை அண்ணாமலையார் கோயிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தின் முன்பாக வைத்து அதற்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீப ஆராதனைகள் செய்து திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த காடா துணியைத் தான் மலையின் மீது கார்த்திகை மகாதீபத்திற்கு திரியாகப் பயன்படுத்துவார்கள்.

இதையும் படிங்க:லாலுபிரசாத் யாதவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை; தந்தைக்கு தானம் வழங்கும் மகள்

ABOUT THE AUTHOR

...view details