தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா முன்னிட்டு பந்த கால் நடும் விழா

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் நடப்பட்டது.

Etv Bharatஅண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா முன்னிட்டு பந்த கால் நடும் விழா
Etv Bharatஅண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா முன்னிட்டு பந்த கால் நடும் விழா

By

Published : Sep 30, 2022, 4:40 PM IST

திருவண்ணாமலையில் உள்ள பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்ற அருணாசலேசுவரர் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று(செப்-30) பந்தகால் நடும் விழா நடைபெற்றது. பூர்வாங்க பணிகளுக்காக இராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும். திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்தாண்டு வரும் நவம்பர் 27ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள அண்ணாமலையாா் மலையின் உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா முன்னிட்டு பந்த கால் நடும் விழா

பத்து நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்க பணிகளுக்காக திருக்கோயிலில் பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்கோயிலில் இருந்து பந்தக்கால் கொண்டுவரப்பட்டு விநாயகர், முருகர், அண்ணாமலையார்,உண்ணாமுலையம்மன் மற்றும் சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட திருத்தேர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் இராஜ கோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார் பக்தர்களுடன் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க:அண்ணாமலையார் கோவில் நவராத்திரி நான்காம் நாள் விழா

ABOUT THE AUTHOR

...view details