தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயில் உண்டியல் வருவாய் ரூ. 38 லட்சம்! - அண்ணாமலையார் கோயில்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயில் உண்டியலில் சித்திரை மாத பௌர்ணமி காணிக்கையாக ரூ.38 லட்சம், 170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.

அண்ணாமலையார் கோயில்
அண்ணாமலையார் கோயில்

By

Published : Apr 29, 2021, 7:35 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாத பவுர்ணமி நாளன்றும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல வருகின்றனர்.

அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள் கோயில் வளாகம், கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி ஏப்ரல் 26ஆம் தேதி பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது இருப்பினும் ராஜ கோபுரம் முன்பு சாமி தரிசனம் செய்துவிட்டு பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு சென்றுள்ளனர் .

பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல் பணத்தை எண்ணும்பணி நேற்று (ஏப். 28) நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக 38லட்சத்து, 28ஆயிரத்து, 292 பணமும்,170 கிராம் தங்கம், 713 கிராம் வெள்ளி கிடைத்தது.

ABOUT THE AUTHOR

...view details