திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று முன்தினம் (ஜன.15) திருவூடல் திருவிழா தொடங்கியது. மகரிஷி என்பவர் அம்பாளை வணங்காமல் சிவனை மட்டும் வணங்கி வந்தார். இதனால் அம்பாள் கோபம் கொண்டு சிவனுடன் உடல் ஏற்பட்டது. இதனை திருவூடல் விழா என்கிறார்கள்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு திருவூடல் விழாவில் சுவாமி, அம்பாள் இடையே ஊடல் ஏற்படுகிறது. அப்போது அண்ணாமலையார் கோயிலுக்கு அம்மனும், குமரக் கோயிலுக்கு அண்ணாமலையாரும் சென்றுவிட்டனர். இந்நிலையில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அண்ணாமலையார் நேற்று (ஜன.16) கிரிவலம் சென்று அருள்பாலித்தார்.