முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக அங்கீகரிப்பேன் என்று அளித்த வாக்குறுதியை ஆளும் அதிமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், முறையான குடும்ப ஓய்வூதியம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் - thiruvannamalai, amganvaadi workers, lament protest
திருவண்ணாமலையில் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10747937-thumbnail-3x2-tvm.jpg)
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஒப்பாரி ஆர்ப்பாட்டம்
மேலும், பணி ஓய்வின் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு 10 லட்சம் மற்றும் உதவியாளர்களுக்கு 5 லட்ச ரூபாய் ஆகியவற்றை வழங்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: எந்த பந்தை உபயோகிப்பது என்ற ஆலோசனையில் பிசிசிஐ!