தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவிலிருந்து விடுதலை: ஆந்திர பெண் 14 கி.மீ. அங்க பிரதக்ஷனம் - Thiruvannamalai district news

ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி திருவண்ணாமலையில் அங்க பிரதக்ஷனம் செய்து வழிபட்டார்

14 கி.மீ. அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த ஆந்திர பெண்
14 கி.மீ. அங்கப்பிரதட்சணமாக கிரிவலம் வந்த ஆந்திர பெண்

By

Published : Jun 23, 2021, 5:23 PM IST

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாதந்தோறும் நடைபெறும் பெளர்ணமி கிரிவலம் பிரசித்தி பெற்றதாகும்.

தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பக்தர்கள், பொதுமக்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஆந்திர மாநிலம் , பீமவரம் பகுதியைச் சேர்ந்த அருணாசலமாதவி ( 35 ) என்பவர், கரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபட வேண்டி, திருவண்ணாமலையில் 14 கி.மீ. கிரிவலப்பாதையில் நேற்று முன்தினம் இரவு அங்க பிரதக்ஷனத்தை ராஜகோபுரம் முன்பு தொடங்கினார். இன்று தன்னுடைய கிரிவலத்தை நிறைவு செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், அண்ணாமலையாரின் தீவிர பக்தரான, தான் , கடந்த 15 ஆண்டுகளாக திருவண்ணாமலைக்கு வந்து வழிபடுவதாகவும், உலகை அச்சுறுத்திவரும் கரோனா தொற்று முழுமையாக ஒழிய வேண்டும். இந்த ஆபத்தில் இருந்து மக்கள் அனைவரும் விடுபட வேண்டும் என அண்ணாமலையாரை வேண்டி அங்க பிரதக்ஷனம் செய்வதாக கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details