திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் , தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பிரதம கூட்டுறவு பண்டகசாலை மூலம் ஏழு கூட்டுறவு மருந்தகங்கள், இரண்டு அம்மா மருந்தகங்கள் உள்ளிட்டவை ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அம்மா மருந்தகம் திறப்பு விழா - Amma pharmacy
திருவண்ணாமலை: கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அம்மா மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
மேலும், மேற்காணும் மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு 20 விழுக்காடு வரை தள்ளுபடி விலையில் தரமான மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. கூட்டுறவு விற்பனை சங்கங்களும், அம்மா மருந்தகங்களும் தொடங்கப்பட்ட நாள் முதல் மே 2019 வரை 14 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிற்கு மருந்துகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்கத்தில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூடுதலாக ஒரு அம்மா மருந்தகத்தை திறந்துவைத்து விற்பனையைத் தொடங்கி வைத்தார்.