திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாநில விவசாயப்பிரிவு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் தலைமையில் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! - admk
திருவண்ணாமலை: கூட்டணிக் கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக வேட்பாளரை அறிமுகம் செய்து வைக்கும் கூட்டம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இவரை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
அப்போது பேசிய அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக களம் இறங்கும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கு அனைத்து கட்சி செயல்வீரர்களும் சிறப்பான முறையில் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.