திருவண்ணாமலை மாவட்டம் ராஜந்தாங்கல், வேட்டவலம், கீழ்பெண்ணாத்தூர் உள்ளிட்ட இடங்களில் அதிமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, இளைஞர், இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆகிய அணிகளுக்கு உறுப்பினர் சேர்த்தல், பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்களை நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
கரோனா விதிகளை பின்பற்றாமல் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டம் - அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை: அதிமுக அணிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கரோனா விதிகள் பின்பற்றப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக கூட்ட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக தொண்டர்கள் முகக்கவசம், தகுந்த இடைவெளியை கடைபிடிக்காமல் பங்கேற்றது சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா நோய் தொற்று மாவட்டத்தில் 10 ஆயிரத்தை நெருங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.