கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில்கொண்டு அதிமுக நிர்வாகிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வண்ணம், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான சேவூர் ராமச்சந்திரன் நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
நிவாரணப் பொருள்கள் வாங்க காத்திருக்கும் மக்கள் திருவண்ணாமலை நகரின் திருவூடல் தெருவில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் மாவட்ட அணி நிர்வாகிகள், வட்டச் செயலாளர்கள், வட்டப் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஆயிரத்து 750 பேருக்கு நிவாரணப் பொருள்களை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன் வழங்கினார்.
25 கிலோ அரிசி, வெங்காயம், தக்காளி, கோஸ் உள்ளிட்ட காய்கறிகள், எண்ணெய், புளி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை ஒவ்வொரு வட்டச் செயலாளருக்கும் அமைச்சர் வழங்கினார்.
அதிமுக நிர்வாகிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய அமைச்சர்! நிவாரணப் பொருள்களை வாங்க வந்தவர்கள் முகத்திரை அணிந்து, தகுந்த இடைவெளியைப் கடைப்பிடித்து நிவாரணப் பொருள்களைப் பெற்றுச் சென்றனர்.
கூட்டம் அதிகம் சேரக்கூடாது என்பதற்காக ஒரு சிலருக்கு மட்டுமே மாவட்டக் கழக அலுவலகத்தில் வழங்கப்பட்டது. மற்ற நிர்வாகிகள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்குச் சென்று பொருள்களை அந்தந்த நிர்வாகிகள் வழங்குவார்கள் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் பார்க்க:'அரசு ஊழியர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது' - ஸ்டாலின் கண்டனம்