திருவண்ணாமலை:நாம் தமிழர் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (அக். 22) போளூரில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக, திருவண்ணாமலையில் திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், கூட்டம் முடிந்து சென்றவுடன் விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது மற்றொரு நிகழ்ச்சிக்கு சென்ற சீமான் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.
இதன் இடையே செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறுகையில், "திமுக தற்போது நடத்தும் கையெழுத்து இயக்கத்தால், என்ன பயன் இருக்கிறது. தமிழகத்தில் இதை போல் பல கையெழுத்து இயக்கம் நடைபெற்று உள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. காங்கிரஸ் தான் நீட் தேர்வை கொண்டு வந்தது. அப்போது திமுக அரசு கையெழுத்து போட்டு ஆதரவு அளித்தது.
தேர்தல் வரும் போது தான் நம் பிள்ளைகள் மீது திமுக அரசிற்கு பாசம் வரும். காவிரியில் தண்ணீர் தரவில்லை என்றாலும், நீட்டை காங்கிரஸ் ஆதரித்தாலும் திமுக, காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளும். தமிழகத்தில் நீட் தேர்வை ஒழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. நீட் தேர்வை எதிர்த்து கையழுத்து இயக்கம் தொடங்குகிறார்கள். இதை மத்திய அரசிடம் தான் கொடுப்பார்கள். அவர்கள் அதை ஏற்றுக்கொள்வார்களா.