தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆரணி ஆர்டிஓ-வுக்கு கரோனா: அலுவலகம் மூடல் - Aarani RDO affected by corona

திருவண்ணாமலை: ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை
திருவண்ணாமலை

By

Published : Apr 26, 2021, 4:56 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடிக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆரணி அரசு மருத்துவமனையில் கரோனா பிரிவில் முதற்கட்ட சிகிச்சை பெற்ற அவர், பின்னர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது,

ABOUT THE AUTHOR

...view details