திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் புகழ்பெற்ற ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். 42ஆவது ஆண்டாக ஆடி மாதத்திருவிழா நடைபெற்றது.
இதனையொட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பூ கரகம் ஜோடிக்கப்பட்டு, ஸ்ரீ மாம்பட்டு முத்து மாரியம்மன் கோயில் சக்தி உபாசகர் லஷ்மணன் தலைமையில் பம்பை உடுக்கையுடன் வர்ணிக்கப்பட்டு 303 பால்குடங்களின் ஊர்வலம் நடைபெற்றது.
இதில் மாம்பட்டு கிராம குளக்கரையில் இருந்து ஏராளமான பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்துகொண்டு மங்கள வாத்தியங்களுடன் பால்குடத்தை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் முத்துமாரியம்மனுக்கு பெண்கள் கைகளால் பால் அபிஷேகம் செய்தனர். முன்னதாக முத்துமாரியம்மனுக்கு சிறப்பு மகாபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்தத் திருவிழாவைக்காண வந்தவாசி மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்தும், சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஸ்ரீமுத்துமாரியம்மனை தரிசனம் செய்துசென்றனர். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோயில் சார்பில் மகா அன்னதானமும் வழங்கப்பட்டது.
வந்தவாசி மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா;303 பால்குடங்களின் ஊர்வலம்! இதையும் படிங்க:ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயிலில் திருவாடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.....