திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 900க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை சரோஜினி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே.டி.குமார் உட்பட 30 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
அரசு கொடுக்கும் நிதி போதவில்லை: மாணவிகளிடம் பணம் வசூல் செய்யும் தலைமை ஆசிரியை! - மாணவிகளிடம் பணம் வசூல்
திருவண்ணாமலை: அரசு கொடுக்கும் நிதி போதவில்லை என்பதால் மாணவிகளிடம் பணம் வசூலிப்பதாக தலைமை ஆசிரியை கூறும் வீடியோ பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேர்க்கை, 11ஆம் வகுப்பிற்கு ஆங்கில வழிக் கல்வி சேர்க்கை ஆகியவற்றிற்கு ஒவ்வொரு மாணவிகளிடம் இருந்து தலா 1,135 ரூபாய் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை ஆசிரியை சரோஜினியை சந்தித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அப்போது, அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதில், அரசு கொடுக்கும் நிதி போதியளவில் இல்லை என்பதால் மாணவிகளிடம் ரூபாய் 1,135 வசூலிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பணத்தை தரவேண்டி எந்த மாணவிகளையும் கட்டாயப்படுத்தவில்லை. பள்ளி பராமரிப்புக்காக கூடுதல் கட்டணம் பெறுவதாக அவர் தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.