திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள குப்பநத்தம் அணை அருகே துரிஞ்சுகுப்பம் வனப்பகுதியில், வயது முதிர்ந்த ஒற்றை கொம்பு யானை, அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் முகாமிட்டுள்ளது. இது அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்புவாசிகளிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை கொம்பு யானை - பொதுமக்கள் அச்சம்! - Chengam thiruvannamalai
செங்கம் அருகே ஒற்றை கொம்பு யானை முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
![செங்கம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை கொம்பு யானை - பொதுமக்கள் அச்சம்! செங்கம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை கொம்பு யானை - பொதுமக்கள் அச்சம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15804974-thumbnail-3x2-onehorn.jpg)
செங்கம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை கொம்பு யானை - பொதுமக்கள் அச்சம்!
செங்கம் அருகே முகாமிட்டுள்ள ஒற்றை கொம்பு யானை - பொதுமக்கள் அச்சம்!
இதனை அறிந்த விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள், செங்கம் வன அலுவலகத்திற்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், அப்பகுதிக்கு சென்ற வன அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:சாலையோரமாக காட்டு யானை ஒய்யார போஸ் - வைரல் வீடியோ