தமிழ்நாடு அரசு கரோனா நோய் தொற்றை தடுக்கும் விதமாக கோயில்கள் அனைத்தும் மூட உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில்,திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள பச்சையம்மன் கோயில் வளாகத்தின் முன்பு, காவல்துறையினர் 300 அடிக்கு முன்னதாகவே பாரி காடுகள் மூலம் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் உள்ளே நுழையாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருப்பினும் பக்தர்கள் தங்கள் குல தெய்வத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தடுப்பிற்கு முன்னதாகவே குல தெய்வத்தின் புகைப்படங்களை வைத்து, பொங்கல் வைத்து, கோழி ஆடு போன்றவற்றை பலி கொடுத்து, மொட்டை அடித்து கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டி வழிபாடு செய்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பதால் வழக்கத்திற்கு அதிகமாக பக்தர்கள், பொதுமக்கள் பச்சையம்மன் கோயில் வளாகத்தின் முன்பு கூடி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். பச்சையம்மன் கோயிலுக்கு செல்லும் சாலை முழுவதும் பக்தர்கள் வெள்ளமாக காட்சி அளிக்கிறது.