திருவண்ணாமலை:ஆரணி புதிய நீதிக் கட்சித் நிறுவனர் ஏ.சி. சண்முகத்துக்கு சொந்தமான ACS நகரில் உள்ள ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக சேலத்திலிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காலை வந்தார்.
மாவட்ட எல்லையான காட்டாம்பூண்டி கிராமத்தில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச்செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி பூங்கொத்து கொடுத்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்றார்.
நூற்றுக்கணக்கான பெண்கள் கையில் மங்கள கும்பம் ஏந்தி வரவேற்றனர். காட்டாம்பூண்டி கிராமத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கொடியினை ஏற்றிவைத்தார். வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அங்கிருந்து புறப்பட்டு திருவண்ணாமலை வந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்ட செயலாளர் சுனில்குமார் ஆகியோர் ஆளுயர மாலை அணிவித்து அண்ணாமலையார் கோயில் பூர்ணகும்ப மரியாதை செய்தனர்.
4 கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட பெருமாள் சிலை, வெள்ளி வேல் ஆகியவற்றை அதிமுக ஐடி விங் மாவட்ட துணை செயலாளர் கௌதம்பாண்டு வழங்கி வரவேற்றார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் இருந்து ஆரணி செல்லும் வழி நெடுகிலும் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு இருந்தன.
எடப்பாடி பழனிசாமிக்கு திருவண்ணாமலையில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு!! இதையும் படிங்க: ஸ்டாலினை விமர்சித்தவரின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்...