சென்னை சேலம் எட்டு வழிச்சாலை வழக்கில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், வருவாய்த்துறை ஆவணங்களில் விவசாயிகளின் நிலம் அரசின் பெயரில் மாறுதல் செய்யப்பட்டவை, அந்தந்த விவசாயிகளின் பெயரில் மாறுதல் செய்து புதிய பெயர் மாற்ற உத்தரவைப் பிறப்பித்து, இரண்டு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும். எட்டு வாரக் காலத்திற்குள் விவசாயிகளின் பெயரில் மாற்றம் செய்திட வேண்டும்’ என்று ஆணையிட்டுள்ளது.
8 வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்க பேரணி - chennai highcourt
திருவண்ணாமலை: எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீட்க, எட்டுவழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பின் சார்பில் மனு கொடுக்க 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றதால் பரபரப்பான சூழல் நிலவியது.
அதே தீர்ப்பை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜுன் 3ஆம் தேதியன்று உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. எனவே, தமிழ்நாடு அரசு தீர்ப்பைச் செயல்படுத்தியாக வேண்டும். இதனை வலியுறுத்தி, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் நிலம் மீட்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலிருந்து தொடங்கிய இப்பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் வரை சென்றது. 300க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்று, ‘எங்கள் நிலம் எங்கள் உரிமை’ என முழங்கி நிலத்தை மீட்க மனு கொடுக்கச் சென்றனர். மோடி அரசும், எடப்பாடி அரசும், விவசாயத்தை ஒழித்துவிட்டு, பெருநிறுவன முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப நடந்துகொள்கிறது. இத்திட்டத்தைப் பிடிவாதமாகச் செயல்படுத்துவதை நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.