திருவண்ணாமலை:ஆரணி அருகே உள்ள தனியார் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு விழா நடைபெற்றது. அந்த வகையில் கல்லூரி மைதானத்தில் இன்று (ஆக.12) 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே நேரத்தில் தேசிய கொடியை கையில் ஏந்தி அசைத்து அணிவகுப்பு நடத்தினர்.
ஆரணியில் தேசியக் கொடியுடன் 5,000 மாணவர்கள் பிரம்மாண்ட அணிவகுப்பு - ஆரணி கோட்டாச்சியர்
ஆரணி அருகே தனியார் கல்லூரியில் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓரே இடத்தில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் தேசிய கொடியை அசைத்து அணிவகுப்பு நடத்தினர்
Etv Bharat
இந்த நிகழ்வில் ஆரணி கோட்டாச்சியர் தனலட்சுமி கலந்துகொண்டார். சுதந்திர தினம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த அணிவகுப்பு நடத்தியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மயிலாடுதுறையில் வரலாற்று சின்னமாக விளங்கும் மணிக்கூண்டிற்கு தேசிய கொடி வர்ணம்
Last Updated : Aug 13, 2022, 4:32 PM IST