தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேய் பிடித்ததாகக் கூறி 7 வயது சிறுவன் கொலை! - குற்றச் செய்திகள்

ஆரணி அருகே கண்ணமங்கலத்தில், பேய் பிடித்ததாகக் கூறி 7 வயது சிறுவனை அடித்து கொலைசெய்த தாய் உள்பட 3 பெண்களை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

thiruvannamalai news  thiruvannamalai latest news  crime news  thiruvannamalai son killed by mother  சிறுவன் கொலை  கொலை  பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவன் கொலை  திருவண்ணாமலை சிறுவன் கொலை  திருவண்ணாமலை பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவன் கொலை  குற்றச் செய்திகள்  கொலை செய்திகள்
பேய் பிடித்ததாக கூறி 7 வயது சிறுவனை கொன்ற தாய்...

By

Published : Jun 21, 2021, 12:22 PM IST

திருவண்ணாமலை: ஆரணி கண்ணமங்கலம் பேரூராட்சி வளாகத்தில், நேற்று (ஜூன் 20) இரவு ஒரு சிறுவனை 3 பெண்கள் அடித்து துன்புறுத்துவதாகக் கண்டமங்கலம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது சிறுவன் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிறுவனின் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக காவல் துறையிரன் மூன்று பெண்களையும் கைதுசெய்து, விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இது தொடர்பாக அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டபோது, சம்பவத்தில் ஈடுபட்டவர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திலகவதி என்பதும்; இவர் சிறுவனின் தாய் என்பதும் தெரியவந்தது.

விசாரணையில் கிடைத்த தகவல்:

திலகவதியின் கணவர் கார்த்தி என்பவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டதாகவும்; தற்போது வேலூர் மாவட்டம் அரியூர் கிராமததில் தன்னுடைய மகன் சபரி (7) என்பவருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சபரிக்கு பேய் பிடித்து இருப்பதாகக் கூறி, வந்தவாசியிலுள்ள ஒருவரிடம் அழைத்துச் செல்வதற்காக நேற்று (ஜூன் 20) ஆட்டோவில் கண்ணமங்கலம் பேரூராட்சி வழியாகச் சென்றுள்ளனர். அப்போது இரவு நேரம் என்பதால், கண்ணமங்கலம் பகுதியிலேயே ஆட்டோ ஒட்டுநர் அவர்களை இறக்கி விட்டதால், அங்கயே தங்கியுள்ளனர்.

அப்போது, திடீரென சிறுவனுக்கு வலிப்பு வந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்துவதற்காக சிறுவனை தாக்கியுள்ளதாகவும், இதில் சிறுவன் இறந்துள்ளான் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் திலகவதியுடன் இருந்த 2 பெண்கள் திலகவதியின் சகோதரிகள் கவிதா, பாக்கியலட்சுமி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 3 பெண்களையும் கைதுசெய்து, சிறுவனை துன்புறுத்தி கொலைசெய்தது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: 'ஆரோக்கியத்திற்கு வலு சேர்க்கும் யோகா' - சர்வதேச யோகா தினம்

ABOUT THE AUTHOR

...view details