தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர்' - Panchayat Secretary

திருவண்ணாமலை: கல்லரைப்பாடி ஊராட்சி மன்றத் தலைவரை பாகுபாட்டுடன் பணி செய்யவிடாமல் தடுத்த ஊராட்சி செயலாளர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என சபாய் கருமாச்சாரி தேசிய ஆணையத் தலைவர் எம். வெங்கடேசன் தெரிவித்தார்.

கல்லரைப்பாடி
கல்லரைப்பாடி

By

Published : Jun 20, 2021, 7:45 AM IST

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொகுதிக்குள்பட்ட கல்லரைப்பாடி ஊராட்சியில், ஊராட்சித் தலைவராக உள்ள ஏழுமலை என்பவரை, ஊராட்சி செயலாளர் வேல் முருகன் என்பவர், பட்டியலினத்தவர் என சாதிபாகுபாட்டுடன் இழிவாக நடத்தியதாகக்கூறி ஊராட்சி மன்றத் தலைவர் பஞ்சாயத்து அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டார்.

இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் அப்போது இருந்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஊராட்சி மன்ற செயலாளர் வேல் முருகனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தினர் ஆய்வு நடத்தக் கோரியதன் அடிப்படையில், நேற்று (ஜூன்.19) கல்லரைப்பாடி கிராமத்தில் சபாய் கருமாச்சாரி தேசிய ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் (National Commission for Safai Karmachari Chairman M. Venkatesan) பாதிக்கப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலாளர் வேல் முருகன், கிராம வார்டு உறுப்பினர்கள் எனப் பலரிடம் தனி தனியாக நேரில் விசாரணை மேற்கொண்டார்.


இந்த விசாரணையின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குனர், கூடுதல் ஆட்சியர் பிரதாப் ஆகியோர் உடனிருந்தனர். இந்த விசாரணை சுமார் இரண்டு மணி நேரம் நடைப்பெற்றது.

விசாரணை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாய் கருமாச்சாரி, தேசிய ஆணைய தலைவர் எம்.வெங்கடேசன் கூறியதாவது, ”செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றில் வந்த செய்திகளின் அடிப்படையில் தாம் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளோம். இந்தச் சம்பவம் குறித்து ஊராட்சி மன்றத் தலைவர், வார்டு உறுப்பினர்களிடம் நேரிடையாக விசாரணை செய்துள்ளோம். அலுவலர்கள் தொடந்து இந்தச் சம்பவம் குறித்து கிராம மக்கள், வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் உள்பட பலரிடம் விசாரணை செய்து வருகிறோம்.

தன்னிடம் உள்ள ஆதாரங்களை ஊராட்சி மன்றத் தலைவர் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலாளர் தற்போது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க வாய்ப்புள்ளது. இது குறித்து கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடையேயும் விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

இது மட்டுமின்றி, பஞ்சாய்த் ராஜ் சட்டப்படி தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் என்பவர் தனிப்பட்ட சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பஞ்சாயத்து அலுவலகத்தில் கட்சியின் வண்ணங்களைக் கொண்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் பெயர்களை எழுதக் கூடாது. இதனை மாவட்ட நிர்வாகம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் நான் தலையிட முடியாது" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details