திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயிலும் 7 வயது சிறுமியான சமந்தா. இச்சிறுமி அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும், கரோனா மூன்றாம் அலையை பாதுகாப்புடன் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று (ஜூலை 28) விழிப்புணர்வு யோகாசனம் மேற்கொண்டார்.
133 அதிகாரம் - 133 யோகாசனங்கள்
திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள ஒரு ஆசிரமத்தில், பேப்பர் கப் மீது அமர்ந்து திருக்குறளின் 133 அதிகாரத்திற்கும் 133 யோகாசனங்கள் 32 நிமிடத்தில் செய்து உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார்.
யோகாசனம் செய்யும் 7 வயது சிறுமி இதுகுறித்து சிறுமி சமந்தா கூறியதாவது, "நான் கடந்த ஆறு மாதங்களாக யோகாசனம் கற்று வருகிறேன். மூன்று மாதத்திற்கு முன்பு கரோனா இரண்டாவது அலை வைரஸ் (தீநுண்மி) தொற்றால் பள்ளிகள், யோகா வகுப்புகள் அனைத்தும் மூடப்பட்டன.
அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை. என்னுடைய யோகா ஆசிரியரிடம் கேட்டன், அதற்கு அவர் கரோனா தொற்றால் பலரும் இறந்து வருகின்றனர். அதனால் தமிழ்நாடு அரசு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
யோகாசனம் செய்யும் 7 வயது சிறுமி இதனால் வகுப்புகள் கிடையாது என்று தெரிவித்தார். அதன்பிறகு அந்த கொடூர கரோனா நோயிலிருந்து நம் அனைவரை காப்பாற்றிக்கொள்ள தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்" என அச்சிறுமி கூறினார்.
இதையும் படிங்க: 'ஆழ்கடலில் தூய்மை பணி - 8 வயது சிறுமி அசத்தல்'