தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் மேலும் 51 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை: மாவட்டத்தில் இன்று (ஜூலை 14) ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.

கரோனா
கரோனா

By

Published : Jul 14, 2020, 4:02 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூலை 13) வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 161ஆக இருந்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 14) புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மாவட்டம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 212ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1,864ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆகவும் இருந்தது. பெங்களூருவிலிருந்து வந்த 7 பேர், சென்னை மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வந்த தலா 2 பேர், கிருஷ்ணகிரியிலிருந்து வந்த ஒருவர், புறநோயாளிகள் பிரிவிலிருந்து 21 பேர், இரண்டாம் நிலை நோய்த் தொற்றுக்கு ஆளான 6 பேர், முன்களப் பணியாளர்கள் இருவர், மற்ற மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்ட 10 பேர் என மொத்தம் 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு கரோனா வார்டு ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details