தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

49 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடு: கட்டுமான பணிகள் தொடக்கம்! - 49 இருளர் குடும்பம்

திருவண்ணாமலை: ஜெகன்னாதபுரம் இருளர் பகுதியில் 49 இருளர் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார்.

49 families

By

Published : Jul 10, 2019, 11:27 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், பொன்னூர் கிராம ஊராட்சி, ஜெகன்னாதபுரம் இருளர் குடியிருப்புப் பகுதியில் உள்ள 49 இருளர் குடும்பங்களுக்கு ஒரு கோடியே 8 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கழிவறை வசதியுடன் கூடிய புதிய வீடுகள் கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம், பாரத பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ஒரு வீடு தலா ரூ. 2.10 லட்சம் செலவிலும் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தின் கீழ் ரூ.12 ஆயிரம் செலவிலும் என மொத்தம் ஒரு இருளர் குடும்பத்திற்கு ரூ. 2.32 லட்சம் செலவில் புதிய வீடுகள் கட்டப்பட உள்ளன.

குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details