தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தத்ரூபமாக சிலை வடிக்கும் சிற்ப கலைஞர்! - மர சிற்பங்கள்

திருவண்ணாமலை: அரிசி, மரம், கல் உள்ளிட்ட அனைத்து பொருள்களிலும் தத்ரூபமாக கடந்த 40 ஆண்டு காலமாக சிற்பக் கலைஞர் பிரான்சிஸ் என்பவர் சிலை வடித்துவருகிறார்.

சிலை வடிக்கும் சிற்ப கலைஞர்
சிலை வடிக்கும் சிற்ப கலைஞர்

By

Published : Sep 21, 2020, 11:10 AM IST

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அக்னி தீர்த்த குளம் அருகே அன்னை தெரசா சிற்பக் கலைக்கூடம் நடத்தி வரும் பிரான்சிஸ் என்பவர் கடந்த 40 ஆண்டு காலமாக சிலை செதுக்கும் சிற்ப வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரிடம் அரிசி, மரம், கல், சோப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களிலும் தத்ரூபமாக சிலை வடிவமைக்க கூடிய ஆற்றல் மிக்கவர்.

சிலை வடிக்கும் சிற்ப கலைஞர்

இவர் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறந்த சிற்ப கலைஞருக்கான விருதுகள், தென்னிந்தியா சிறந்த சிற்ப கலைஞருக்கான விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கரோனா தொற்று காலம் என்பதால் முன்பு இருந்தது போல் சிற்ப வேலைகள் இல்லாமல் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது, எனினும் தற்போது ராணிப்பேட்டையை சேர்ந்த தீபா பிளைவுட் கம்பெனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கொடுத்த ஆர்டரின் பெயரில் தாமரை மீது நாட்டிய மங்கை நடனமாடுவது போன்ற ஒன்பது அடி உயரம் கொண்ட சிலையை செய்துவருகிறார்.

சிற்பக் கலைஞர் பிரான்சிஸ்

இதன் மூலமாக கரோனா காலத்தில் ஏற்பட்டு வந்த பொருளாதார பிரச்னையிலிருந்து விடுபட்டு உள்ளார். அனைத்து மதத் தலைவர்கள், சுவாமி சிலைகள், கட்சித் தலைவர்கள், தேசத்தலைவர்கள் ஆகியோரின் புகைப்படத்தை கொடுத்தாலே மரத்தாலும், கல்லாலும் சிலைகளை தத்ரூபமாக வடிவமைக்க கூடிய திறமை மிக்கவர். இவரிடம் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிற்ப கலைப் பயிற்சி பெற்று பல்வேறு இடங்களில் சுயமாக தொழில் தொடங்கி, தற்போது நல்ல வருமானம் ஈட்டி, வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளனர் என்று பெருமிதத்துடன் பிரான்சிஸ் தெரிவிக்கின்றார்.

இதையும் படிங்க: தொடர் மழை: மதகுகள் வழியாக உபரிநீர் திறப்பு!

ABOUT THE AUTHOR

...view details