தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா - மாவட்ட நிர்வாகம் திணறல்!

திருவண்ணாமலை: முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 303ஆக உயர்ந்துள்ளது.

தி.மலை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா; மாவட்ட நிர்வாகம் திணறல்!
தி.மலை ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா; மாவட்ட நிர்வாகம் திணறல்!

By

Published : May 29, 2020, 10:16 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 27/5/20 அன்று வரை 263 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று 40 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதனால் மொத்தம் 303 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 91 பேர் நோய்த்தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா பரிசோதனை

நேற்று நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களில் கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்தவர்கள் 20 பேர், சென்னையிலிருந்து வந்தவர்கள் 14 பேர், மும்பையிலிருந்து வந்த நான்கு பேர் உட்பட விழுப்புரத்திலிருந்து வந்த ஒருவர் என மொத்தம் 40 பேர் ஆகும். அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமத்தூர் மலைவாழ் மக்கள் 20 பேருக்கு நேற்று ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அதேபோன்று திருவண்ணாமலை அடுத்த கோலியனூர் என்ற ஒரே கிராமத்தில் ஐந்து பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

வீதிகளிலும் குளோரின் பவுடர் தூவப்பட்டது

இந்த நிலையில் கிராம ஊராட்சி சார்பில் துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், டேங்க் ஆபரேட்டர்கள் கொண்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகளுக்கும்,அனைத்து வீதிகளிலும் குளோரின் பவுடர் தூவப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தெருக்களில் கிருமிநாசினி தெளிப்பு

அதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் அனைத்து வீடுகளுக்கும் சென்று கர்ப்பிணிப் பெண்கள் உள்பட சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்கள் இருக்கிறார்களா என்பது குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

வீடு வீடாக சென்று அலுவலர்கள் ஆய்வு

கரோனா எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மாவட்ட நிர்வாகம் எந்தவித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல் திணறி வருகிறது.

எனவே இனிமேலாவது மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொண்டு தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க:அதிகமான கரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் செல்லூர் ராஜு

ABOUT THE AUTHOR

...view details