தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை ஐந்து) 4,150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில் இன்று (ஜூலை ஆறு) திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு வயது குழந்தை உட்பட 38 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 534ஆக உயர்ந்துள்ளது.