திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் வந்தது. இத்தகவலின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி தலைமையிலான காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல்: ஐவர் கைது - திருவண்ணாமலை அண்மைச் செய்திகள்
திருவண்ணாமலை: தானிப்பாடி அருகே விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச் சாராயத்தை பறிமுதல் செய்து, ஐந்து பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
சாராயம் விற்பனை செய்த ஐவர் கைது
அச்சோதனையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய சென்னம்மாள் (55), வாசுகி (43), காமாட்சி (38), பட்டன் (55), பழனி (52) ஆகிய ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :'நான் நெய் தோசை ஸ்பெஷலிஸ்ட்டு' - தோசை மாஸ்டராக மாறிய குஷ்பு