தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து: 3 பேர் பலி; 30 பேர் படுகாயம்! - Tiruvannamalai bus accident

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Etv Bharatஅரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு
Etv Bharatஅரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு

By

Published : Dec 4, 2022, 10:44 AM IST

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த காந்திநகர் பகுதியில் சிதம்பரத்திலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசு பேருந்தும், பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலைக்குக் காய்கறி பாரம் ஏற்றி வந்த லாரியும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

இந்த கோர விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் மற்றும் சரக்கு லாரியில் பயணம் செய்த ஒருவர் என மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின் போது அரசு பேருந்தின் பின்தொடர்ந்து வந்த மற்றொரு லாரியும் பேருந்து மீது மோதியது. விபத்து குறித்து செங்கம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:கட்டட பணியாளர்கள் கழிவறையை எட்டிப் பார்த்ததாக மாணவிகள் புகார்!

ABOUT THE AUTHOR

...view details