அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நான் பி.சி.ஏ. (BCA) படித்துள்ளேன். என் கணவர் லாரி ஓட்டுநராக வேலைசெய்து எங்களைக் காப்பாற்றிவருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரகம் அறிவித்திருந்த, சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று எனது கைப்பேசிக்கு 9786424582 என்ற எண்ணிலிருந்து அழைப்புவந்தது. அந்த அழைப்பில் என்னிடம் மறுமுனையில் பேசிய நபர், 'நான் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன். நீங்கள் சத்துணவு அமைப்பாளர் வேலைக்கு விண்ணப்பித்திருந்தீர்களே, அதில் உங்களுக்கு வேலை வாங்கித் தருகிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நான்கு லட்சம் தந்தீர்கள் என்றால் வேலை வாங்கித் தருவேன்' என்று ஆசைவார்த்தை கூறி நம்பிக்கை அளித்தார்.
அதனை நம்பி நான் அவர் தெரிவித்த வங்கிக் கணக்கில் ஐந்து தவணையாக மொத்தம் மூன்று லட்சத்து 94 ஆயிரத்து 700 செலுத்தினேன். மேற்படி நான் சிறுகச் சிறுக சேமித்துவைத்திருந்த பணம், எனது நகைகளை அடைமானம் வைத்து செலுத்தினேன்.