திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்காக பறக்கும்படை குழுக்கள் மூன்றும், நிலை கண்காணிப்புக் குழுக்கள் மூன்றும் என ஆறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
ஒரு குழுவில் ஒரு கண்காணிப்பு அலுவலர், ஒரு பெண் போலீஸ் உட்பட மூன்று போலீசார், ஒரு வீடியோகிராஃபர் நியமிக்கப்பட்டனர். மேலும் அந்தக் குழுவிற்கு ஒரு அரசு வாகனம் ஒதுக்கப்பட்டு, தொகுதிக்குட்பட்ட சாலைகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதோடு, அவ்வழியாக வரும் வாகனங்களில் உரிய ஆவணமின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகின்றனவா என பரிசோதனை செய்து உரிய ஆவணம் இல்லாமல் இருக்கும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு குழுவும் 3 ஷிஃப்ட்டுகளாகப் பிரித்து சுழற்சி முறையில் அலுவவலர்கள், போலீசார் பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம். இந்நிலையில் செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்ட பறக்கும் படை குழு வாகனத்தின் டிரைவர் பணிக்கு வராததால் ரோந்துப் பணிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.