தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் ஒரே நாளில் 26 பேருக்கு கரோனா - திருவண்ணமலையில் 26 பேருக்கு கரோனா

திருவண்ணாமலை : இன்று ஒரே நாளில் மாவட்டத்தில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலையில் 26 பேருக்கு கரோனா உறுதி
26 பேருக்கு கரோனா உறுதி

By

Published : Jun 10, 2020, 7:23 PM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 522ஆக இருந்தது. இன்று புதிதாக 26 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனை அடுத்து மாவட்டம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 548ஆக உயர்ந்துள்ளது.

நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 310ஆக உள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக உள்ளது.

சென்னையிலிருந்து வந்த நான்கு பேர், பெங்களூரிலிருந்து வந்த மூன்று பேர், ஓசூரில் இருந்து வந்த ஒரு நபர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த ஐந்து பேர், மற்ற மாவட்டங்களில் இருந்து வந்த ஆறு பேர், புற நோயாளிகள் பிரிவில் இருந்த ஏழு பேர் உள்ளிட்ட 26 பேருக்கு இன்று ஒரே நாலில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாவல்பாக்கம் வட்டத்தைச் சேர்ந்த எட்டு பேரும், கலசபாக்கம், சேத்பட், செங்கம், திருவண்ணாமலை நகராட்சி, காட்டாம்பூண்டி, கிழக்கு ஆரணி, பெருங்காட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 26 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

ஒருபுறம் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்தாலும், மறுபுறம் நோய்த் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 310 பேர் குணமடைந்து வீடு திரும்பியிருப்பது பொது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் 15 பேர் மட்டுமே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 40 நாள்களில் மட்டும் தொற்று பாதிப்பு 36 மடங்கு அதிகரித்து, 533 பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கிராமப் பகுதிகளைவிட நகரப் பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகமாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details