திருவண்ணாமலை சமுத்திரம் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல் துறையினருக்கு நேற்று (ஏப்ரல் 20) ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காவல் துறையினர் அப்பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலையில் 25 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா பதுக்கி வைத்திருந்த பெண் உட்பட நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
அப்போது, அங்குள்ள குப்பைக் கிடங்கில் சந்தேகத்துடன் கஞ்சா பதுக்கி வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ’25 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 1.25 லட்சம் இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து, விசாரணையில் கஞ்சாவை பதுக்கி சில்லறையில் விற்பனை ஈடுப்பட்ட பெண் உட்பட நான்கு பேர் இருப்பதாக தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த காவல் துறையில் நான்கு பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அனைவருக்கும் ஒரே நேரத்தில் தகவல்கள் கிடைக்க வேண்டும் என வழக்கு: மும்பை பங்குச் சந்தை பதிலளிக்க உத்தரவு