உலக வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை, போதையால் ஏற்படும் தீமைகள் உள்ளிட்டவைகளை தமிழ்நாடு அரசு தடுக்கக் கோரி தமிழ் மாநிலக்குழு சார்பில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கோட்டை வரை நடைபயணம் மேற்கொண்டனர்.
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகே தொடங்கிய நடைபயணத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, திரைப்பட இயக்குனர் லெனின் பாரதி உள்ளிடோருடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த பாலபாரதி, "படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைப்போம் என்று அரசாங்கம் கூறியது, ஆனால் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டுதான் வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கஞ்சா, குட்கா உள்ளிட்டப் போதைப் பொருட்கள் காவல்துறையினருக்கு தெரிந்தே விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால், கோவை மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி பாலியல் வண்புணர்விற்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார், ஈரோடு அந்தியூரில் இரண்டு மாணவிகள் பாலியல் வண்புனர்வால் உயிரிழந்துள்ளனர். இவற்றைப் பட்டியல் போட்டால் எல்லா மாவட்டங்களிலும் நீண்டு கொண்டே செல்கிறது. தமிழ்நாடு அரசு பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அரசாக உள்ளது. இதனைக் கண்டிக்கும் விதமாக சென்னை கோட்டை வரை 200 கி.மீ நடைபயணம் மேற்கொள்கிறோம். என்றார்.
இதையும் படிங்க: ஒன்பது வயது சிறுமியை சீண்டியவர் போக்சோவில் கைது!