திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியிலுள்ள செல்வா நகரில் வசிப்பவர்கள் அரசு ஊழியர்களான ராமச்சந்திரன் - மணிமேகலை தம்பதி. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்து வரும் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் மூன்று நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மூன்று நாட்களாக அவரின் வீடு பூட்டியிருந்தது.
அரசு ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை! - நகை திருட்டு
திருவண்ணாமலை: அரசு ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
தடயங்களை சேகரிக்கும் தடவியல் நிபுணர்கள்
இதனை நோட்டமிட்டு நேற்றிரவு வீட்டின் பூட்டை உடைத்து வீட்டினுள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 சவரன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தம்பதி, வீட்டில் நகைகள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: