தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலுக்கு ரூ.2 கோடி உண்டியல் காணிக்கை - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

கார்த்திகை மாதத்தில் அண்ணாமலையார் கோயிலுக்கு உண்டியல் காணிக்கையாக 2 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 669 ரூபாய் கிடைத்துள்ளது.

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது
அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது

By

Published : Dec 16, 2022, 9:43 AM IST

அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் வருவது வழக்கம். இந்த எண்ணிக்கை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா நாளில் பன்மடங்கு உயரும். அந்த வகையில் தீப திருவிழாவில் லட்ச பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் திருக்கல்யாண மண்டபத்தில் நேற்று (டிசம்பர் 15) கார்த்திகை மாத உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. கோயிலலின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலையில், சுமார் 120 பேர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல் செலுத்தப்பட்ட காணிக்கையை எண்ணும் பணியானது நேற்று காலை தொடங்கி மாலை நிறைவு பெற்றது. இதில் 2 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரத்து 669 ரூபாய் மற்றும் 228 கிராம் தங்கமும், 1478 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:பழனி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் - தேதி அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details