திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அடுத்த திருவானைமுகம்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் யாழினி (7), மகன் விஷ்வா (4). சிறுவர்களான அக்கா, தம்பி இருவரும் துரிஞ்சல் ஆற்றில் உள்ள குட்டையில் தேங்கியிருந்த நீரில் குளிப்பதற்காக தனியாகச் சென்றுள்ளனர்.
ஆற்றின் சிறு குட்டையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் மூழ்கி பலி - ஆற்றில் குளிக்கச் சென்ற குழந்தைகள் பலி
திருவண்ணாமலை: ஆற்றின் சிறு குட்டையில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறு குட்டை
ஆற்றின் குட்டையில் தேங்கியிருந்த நீரில் குளிக்கச் சென்ற இருவரும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கி இறந்த இரண்டு சிறுவர்களை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
ஆற்றுநீரில் மூழ்கி 2 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து தகவலறிந்த வெறையூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.