தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலையில் 170 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் - இந்திய தேர்தல் ஆணையம்

திருவண்ணாமலையில் உள்ள 2885 வாக்குச்சாவடி மையங்களில் 170 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அடையாளம் காணப்பட்டுள்ளன என அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

By

Published : Feb 28, 2021, 2:45 PM IST

திருவண்ணாமலை : தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் (பிப்.26) அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தலைமை மாநில தேர்தல் ஆணையம் முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் தேர்தல் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர், “திருவண்ணாமலை மாவட்டத்தில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், விரைவாக வாக்களிக்கவும் கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இதனால் ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து அந்த வாக்குச்சாவடிகளை இரண்டாக பிரித்து கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக 513 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மொத்தம் 2885 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால் நமது மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைக் குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் விரிவுப்படுத்தப்படும். பறக்கும் படைக் குழுவானது, சுழற்சிமுறையில் பணியில் ஈடுபடும்.

ஆள்மாறாட்டம் செய்து ஓட்டு போட்டதாக புகார் வந்தால், அந்த பூத்துக்கு மறு தேர்தல் நடத்தப்படும். வாக்களிக்க வழங்கப்படும் ஓட்டர்ஸ் சிலிப்பை வைத்து மட்டும் ஓட்டுப் போட முடியாது. வாக்காளர் அடையாள அட்டையோ, தேர்தல் ஆணைய அனுமதி அட்டையோ கட்டாயம் வேண்டும்.

கடந்த சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் போது ஏற்பட்ட மோதல் சம்பவங்களின் அடிப்படையில் திருவண்ணாமலையில் 170 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்” என தெரிவித்தார்.

தேர்தல் குறித்து நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க :வாக்குப்பதிவில் ஆள்மாறாட்ட புகார் வந்தால் மறுதேர்தல்!

ABOUT THE AUTHOR

...view details